Aran Sei

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 மீனவர்கள் கைது – இலங்கை கடற்படையை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன.

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இலங்கையின் நெடுந்தீவு அருகே நேற்று (ஏப்ரல் 3) மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 12 பேரையும், ஒரு விசைப்படகையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, அம்மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றச்சாட்டு – தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

இதையடுத்து, இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை நேற்று (ஏப்ரல் 3) நடத்தியுள்ளனர். அக்கூட்டத்தில், இலங்கை கடற்படையை கண்டித்து ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனால், இன்று (ஏப்ரல் 4) மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை கடலில் நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்