Aran Sei

‘மாநில அதிகாரத்தின் கீழுள்ள கூட்டுறவு சங்கங்களை மோடி அரசு கைப்பற்றுகிறது’ – ரமேஷ் சென்னிதலா குற்றச்சாட்டு

புதிதாக கூட்டுறவு துறை அமைச்சகத்தை உருவாக்கியுள்ள ஒன்றிய அரசை விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் கேரள சட்டபேரவையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா, நாட்டில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து, முக்கிய துறைகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் பாஜக மற்றும் சங் பரிவாரின் நடவடிக்கைகளுக்கு ​எதிராக ஒருங்கிணைந்த போராட்டத்தைத் தொடங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இன்று (ஜூலை 11), செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள ரமேஷ் சென்னிதலா,  “கூட்டுறவு துறையில் வலுவான கட்டமைப்பை கொண்ட கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கூட்டுறவு சங்கங்களை கைப்பற்ற மோடி அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு எதிரானது. அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

‘கூட்டாட்சி கொள்கைக்கு எதிராக  செயல்படும் ஒன்றிய அரசு’ – ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் குற்றச்சாட்டு

இவ்விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் தலையீட்டைக் கோரி எதிர்க்கட்சிகளின் குழு குடியரசுத் தலைவரை சந்திக்க வேண்டும் என்றும், கூட்டுறவு சங்கங்களின் அதிகாரங்கள் இந்திய அரசியலமைப்பின் 7 வது அட்டவணையில் மாநில அதிகாரத்தின் கீழ் வருவதால், எதிர்க்கட்சியும் இந்த விவகாரத்தை சட்டரீதியான வழியை நாட வேண்டும் என்றும் அவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

புதிதாக ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டுள்ள கூட்டறவு துறை அமைச்சகத்தின் பொறுப்புகள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்