மேற்குவங்க மாநிலத்தைச் சார்ந்த இந்திய மருத்துவ சங்கத்தினர் அல்லோபதி மருத்துவம் குறித்த பாபா ராம்தேவ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொல்கத்தா நகரில் உள்ள சிந்தி காவல்நிலையத்தில் இதுகுறித்து அளிக்கப்பட்டுள்ள புகாரில், கொரோனா தொற்று காலத்தில் பாபா ராம்தேவ் போலியான மற்றும் தவறானக் கருத்துக்களைக் கூறி மக்களைக் குழப்பி வருவதாக குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
அலோபதியை விமர்சித்த பாபா ராம்தேவ்: நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தை அறிவித்த பயிற்சி மருத்துவர்கள்
பாபா ராம்தேவ் நவீன அல்லோபதி மருந்துகள் கொரோனா தொற்றைக் குணப்படுத்தவில்லை,10,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டதற்கு பின்னரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று போலியான தகவல்களைச் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
அலோபதியை விமர்சித்த பாபா ராம்தேவ்: விவாதத்திற்கு வருமாறு சவால்விடுத்த இந்திய மருத்துவ சங்கம்
மேலும், இந்திய மருத்துவ சங்கத்தினர் அளித்துள்ள அந்த புகாரில்,” போலியான, தவறான தகவல்களைப் பரப்பி பாபா ராம்தேவ் குழப்பம் விளைவிக்க முயல்கிறார். இது சட்டப்படி குற்றம்” என்று தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.