Aran Sei

‘கும்பமேளாவிற்கும் இந்து மதத்திற்கும் அவப்பெயர் விளைவிக்கும் அரசியல் சதி நடக்கிறது’ – பாபா ராம்தேவ்

த்தரகாண்ட் கும்பமேளாவிற்கும் இந்து மதத்திற்கும் அவப்பெயர் விளைவிக்கும் வகையில் அரசியல் சதி நடக்கிறது என்று பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து, பாபா ராம்தேவ் வெளியிட்டுள்ள காணொளியில், “ஒரு டூல்கிட்டின் உதவியுடன், உத்தரகாண்ட் கும்பமேளாவிற்கும் இந்து மதத்திற்கும் அவப்பெயர் விளைவிக்கும் அரசியல் சதியை செய்கிறார்கள். இந்த விவகாரத்தை அரசியலாக்கும் மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள். ஆனால் நூறு கோடி இந்துக்களை அவமதிக்க வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார்.

கும்பமேளா – ஹரித்துவாரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 நாட்களில் 1800% அதிகரிப்பு

மேலும், “இது முற்றிலும் அருவருப்பானது. நாட்டிற்கு எதிரான இத்தகைய சக்திகளை புறக்கணிக்க வேண்டும் என்று நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.

மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 27 ஆம் தேதி வரை, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற கும்பமேளாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாது நடத்தப்பட்ட கும்பமேளாவால், அம்மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்ததாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

கும்பமேளாவில் பங்கேற்ற 30-க்கும் மேற்பட்ட இந்து துறவிகளுடன் 2000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, கும்பமேளா விழா முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்