Aran Sei

’வன்னியர் இடஒதுக்கீடு கிடைக்கும் வரை கூட்டணி பற்றி பேச்சுக்கே இடமில்லை’ – ராமதாஸ் உறுதி

ன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜனவரி 11) பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை திண்டிவனத்தில் உள்ள அவரது தைலாபுரம் இல்லத்தில், தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

கடந்த 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அதிமுகவின் எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது, வன்னியர் சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில்  உள் ஒதுக்கீடு கோரி, அச்சமுதாய மக்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“இடஒதுக்கீட்டுக்காக வரலாறு காணாத போராட்டம்” – ராமதாஸ் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமுதாய மக்களுக்கு 20 சதவீதமும், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடங்கப்பட்ட போராட்டம் வட தமிழகம் முழுதும் பரவியது.

சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு, மறியல்கள் செய்தனர். ஒரு வாரத்திற்கு மேல் நடந்த போராட்டத்தில், காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் பலியாகினர்.

ரயில் மறிப்பு, கற்கள் வீச்சு – தொடங்கியது பாமக இடஒதுக்கீடு போராட்டம்

அதைத் தொடர்ந்து, அடுத்து பதவி ஏற்ற கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது. அந்த இட ஒதுக்கீடு 30 ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது.

சென்ற ஆண்டு, வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோரி, டிசம்பர் 1-ம் தேதி அன்று போராட்டம் நடத்தப்போவதாக பாமாக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதனையடுத்து, டிசம்பர் 1-ம் தேதி, இட ஒதுக்கீடு போராட்டத்தில் கலந்துகொள்ள வெளியூர்களிலிருந்து வரும் பாமகவினரை சென்னை பெருநகர எல்லையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

பெருங்களத்தூரில் காவல்துறையினரால் தடுத்த நிறுத்தப்பட்ட பாமக தொண்டர்கள் ஆத்திரத்தில் ரயிலை மறித்து கற்களை வீசி தாக்கினர். சென்னையின் தெற்குப் புறநகரில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது. சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இரண்டரை கோடி வன்னியர்களை அடகு வைத்தது பாமக : காடுவெட்டி குரு மகன் கனலரசன்

 

நேற்று, ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இன்று என்னை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு மீண்டும் இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு : பெரும்பான்மைச் சாதிகளுக்கு வலுக்கும் அதிகாரம் – ஸ்டாலின் ராஜாங்கம்

மேலும், “அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும் தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை. வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறாரா ராமதாஸ்?

சமீப காலங்களாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு, வன்னியர் இடஒதுக்கீடு போன்ற விவகாரங்களில் தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகளை ராமதாஸ் வைத்து வருவதும், “தேர்தல் வரும் நேரத்தில், முதல்வர் வேட்பாளர் யார் என்று இராமதாஸ் அறிவிப்பார்.” என்று பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்ததும், அதிமுக மற்றும் பாமக இடையேயான கூட்டணியின் உறுதிப்பாடு குறித்து சந்தேகங்களை எழுப்பி வருகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்