Aran Sei

‘பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சாதிகளைச் சேர்க்கும் உரிமை மாநிலங்களுக்கே வேண்டும்’ – ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சாதிகளைச் சேர்க்கும் உரிமையை மாநிலங்களுக்கு மீண்டும் வழங்குவதற்காக, அரசியலமைப்புச் சட்டத்தின் 342-வது பிரிவைத் திருத்தும் மசோதாவை, வரும் 19-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 03) தன் டிவிட்டர் பக்கத்தில், “பிற்படுத்தப்பட்ட வகுப்பில் எந்தெந்த சாதிகளைச் சேர்த்து, இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் என்று, ஒன்றிய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கூறியிருக்கிறார். இது வரவேற்கத்தக்கது!” என்று தெரிவித்துள்ளார்.

 

மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வுமனு – மகாராஷ்டிரா மாநில அரசுக்கு வல்லுநர் குழு பரிந்துரை

அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 102-வது திருத்தத்தின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சாதிகளைச் சேர்க்க ஒன்றிய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று, மராத்தா வழக்கில் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் இது முக்கியத்துவம் பெறுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் மாநிலங்களின் உரிமை பறிக்கப்படுவதாகவும், இந்த சமூக அநீதியைக் களைய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்றும் கடந்த மே 9-ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதை இப்போது ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி!” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

“பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சாதிகளைச் சேர்க்கும் உரிமையை மாநிலங்களுக்கு மீண்டும் வழங்குவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் 342-வது பிரிவைத் திருத்தும் மசோதாவை வரும் 19-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும்!.” என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்