Aran Sei

ரம்ஜான் தொழுகைக்காக ஊழியர்களுக்கு தினமும் அளிக்கப்பட்ட 2 மணி நேர ஓய்வு – திரும்பப் பெற்றது டெல்லி குடிநீர் வாரியம்

ம்ஜான் காலத்தில், இஸ்லாமிய ஊழியர்களுக்குத் தினமும் அளிக்கப்பட்ட 2 மணி நேர ஓய்வைத் திரும்பப் பெறுவதாக டெல்லி குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

2022 ஏப்ரல் 3 முதல் மே 2 வரையிலான ரமலான் காலத்தில் இஸ்லாமிய ஊழியர்களுக்குத் தினமும் 2 மணி நேரம் ஓய்வு அளிப்பதாக டெல்லி குடிநீர் வாரியம் தெரிவித்திருந்தது.

டெல்லியில் நவராத்திரியின் போது கறிக்கடைக்கு தடை – அரசியல் சட்டத்திற்கு எதிரானதென மெஹுவா மொய்த்ரா விமர்சனம்

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 5) டெல்லி குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இஸ்லாமிய ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட ஓய்வை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. மேலும், அதில் அலுவலக பணிகள் பாதிக்கப்படாமல் இஸ்லாமிய ஊழியர்கள் தங்களது ரம்ஜான் கடமைகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்