Aran Sei

ராமர் கோவிலுக்கு குடியரசுத் தலைவர் 5 லட்சம் நன்கொடை – ‘என் பெயரில் ஒரு செங்கல்’ என்று ம.பி., முதல்வர் பெருமிதம்

ram-temple

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு நன்கொடையாக, ஐந்து லட்சத்து நூறு (5,00,100) ரூபாய் வழங்கியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின், அயோத்தி நகரத்தில், 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அதன்பிறகு, 28 ஆண்டுகள் கழித்து பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில், இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தில், ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ராமர் கோயில் கட்டுமானத்தை மேற்கொள்ள,  மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை அமைத்தது. அந்த அறக்கட்டளை தற்போது ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக நன்கொடையை பெற்று வருகிறது.

ராமர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் – உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்

ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்று பெயரிடப்பட்ட அந்த அறக்கட்டளை சார்பில், அதன் இணைத் தலைவர் கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ், விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அலோக் குமார், ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான குல்பூஷன் அஹுஜா, அயோத்தி ராமர் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா ஆகியோர் நேற்று (15.01.21) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து, ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நன்கொடையை பெற்றுள்ளனர்.

அயோத்தி ராமர் தரிசனம் எப்போது – யோகி ஆதித்யநாத் விளக்கம்

“அவர் நாட்டின் முதல் குடிமகன், எனவே இந்த நன்கொடை இயக்கத்தைத் தொடங்கி வைக்க, நாங்கள் அவரிடம் சென்றோம். அவர், ரூ. 5,00,100 நன்கொடையாக வழங்கினார்” என்று விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் கூறியுள்ளார்.

பிரதமரால் கிடைத்த ராமர் கோவில் தீர்ப்பு – ஜே.பி.நட்டா

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக ரூ.1 லட்சம்  நன்கொடையாக வழங்கியுள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் “என் குடும்பத்தின் சார்பாக ஒரு செங்கல் ராமர் கோயில் கட்டுமானத்தில் இடம்பெறும். இது ராமர் கோயில் அல்ல, தேசிய கோயில்” என தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி  வெளியிட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீடு – பாஜக தலைவர்கள் விடுதலைக்கு எதிராக வழக்கு

மத்திய பிரதேசத்தில், ராமர் கோயில் கட்டுமானத்துக்காக இந்து அமைப்புகள், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குச் சென்று நன்கொடைகள் கேட்டது, பல இடங்களில் மோதல்களை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்