Aran Sei

ஜார்க்கண்ட்: ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் – 8 பேர் காயம்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நேற்று (ஏப்ரல் 10) மாலை 5.30 மணியளவில் லோஹர்டகா மாவட்டத்தின் ஹிர்டி கிராமத்தில் முதல் மோதல் சம்பவம் நடந்துள்ளது.

இச்சமபவம் குறித்து பேசியுள்ள லோஹர்டகாவின் துணை-பிரிவு அதிகாரி அரவிந்த் குமார் லால், “144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மத ரீதியிலான அனைத்து கூட்டங்களும் ஊர்வலங்களும் தடை செய்யப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.

ராம நவமி ஊர்வலத்தின்போது, இரு குழுக்களும் தங்களுக்குள் கற்களை வீசிக்கொண்டதால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட வழி வகுத்துள்ளது. இரு குழுக்களைச் சேர்ந்த எட்டு பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்லாமியரின் கடையை தாக்கிய ஸ்ரீராம சேனை: ‘கன்னடர்களை பாஜக தலைகுனிய வைக்கிறது’ – சித்தராமையா

அதே போல், பொகாரோ மாவட்டத்தில் உள்ள பெர்மோ பகுதியில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போதும் இரு குழுக்களுக்கு இடையே மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள காம்பத் நகரில் ராம நவமியை முன்னிட்டு நடத்தப்பட்ட ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார்.

அம்மாநிலத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஹிம்மத்நகர் நகரிலும் இதேபோன்று நடந்த சம்பவத்தின்போது இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேசம்: ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் – வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டதால் ஊரடங்கு உத்தரவிட்ட அரசு நிர்வாகம்

மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் நகரில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கல் வீச்சைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் வாகனங்களுக்கும் வீடுகளுக்கும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Source: Indian Express, PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்