Aran Sei

‘மேற்கு வங்கத்தில் முகாமிட்டுள்ள மத்திய அரசு திரும்பிய பின் பேச்சு வார்த்தையை தொடங்குவோம்’ – ராகேஷ் திகாயத்

டெல்லி எல்லையில் இருந்து போராடும் விவசாயிகள் வெளியேறி வருவதாக எழுந்த செய்திகளை மறுத்துள்ள பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத், அவர்கள் அறுவடைப் பணிக்கு செல்லும் விவசாயிகள் என்றும், ‘மேற்கு வங்க தேர்தல் பரப்புரை பணியில்’ இருந்து மத்திய அரசு திரும்பும்போது, அவர்களும் போராட்டக்களம் திரும்பி விடுவார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஏப்ரல் 4), குஜராத் மாநிலம் பலந்த்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ராகேஷ் திகாயத்திற்கு எதிராக சிலர் கருப்புக்கொடி காட்டியுள்ளனர். அதையடுத்து, அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தியுள்ளனர்.

‘விளம்பரத்திற்காகவே விவசாயிகள் சங்கத் தலைவரின் வாகனத்தை தாக்கினேன்’ – பாஜக மாணவர் தலைவர் வாக்குமூலம்

அதைத் தொடர்ந்து பேசிய அவர், “அவர்கள் கறுப்புக் கொடிகளைக் காட்டிக்கொள்ளட்டும். எனக்கு அது ஒரு பொருட்டல்ல. குஜராத்தின் மக்களையும், ஊடகங்களையும், விவசாயிகளையும், இளைஞர்களையும் விடுவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன். விவசாயிகளும் இளைஞர்களும் இப்போராட்டத்தில் இணையட்டும்.” என்று கூறியுள்ளார்.

“விவசாயிகள் போராட்டக்களங்களை விட்டு வெளியேறுவதாக வெளியான செய்திகள் அனைத்தும் தவறானவை. விவசாயிகள் எப்போதும் வருவார்கள், செல்வார்கள். தற்போது அவர்கள் அறுவடைப் பணிகளுக்காக தங்கள் வயல்களுக்கு சென்றுள்ளனர். மேற்கு வங்காளத் தேர்தலில் இருந்து மத்திய அரசு விடுபட்டவுடன் திரும்பி வரும்படி, நாங்கள் விவசாயிகளிடம் கூறியுள்ளோம். முழு அரசாங்கமும் மேற்கு வங்காளத்தில்தான் முகாமிட்டுள்ளது. மத்திய அரசு திரும்பியதும், அதனுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவோம்.” என்று ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்