Aran Sei

‘அடுத்து குஜராத்தில் டிராக்டர் பேரணி; காந்திநகர் முற்றுகை’ – விவசாயிகள் சங்கத்தலைவர் ராகேஷ் திகாயத் அறிவிப்பு

Image Credit : thewire.in

டெல்லிக்குப் பிறகு குஜராத் மாநிலத்திலும் விவசாயிகளின் டிராக்டர் பேரணியை நடத்தவுள்ளோம் என்றும் மாநில தலைநகர் காந்திநகரை முற்றுகை செய்ய நேரம் வந்துவிட்டது என்றும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் எச்சரித்துள்ளார்.

நேற்று (ஏப்ரல் 4), மத்திய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.  இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலத்திற்கு வருகை தந்துள்ள பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் திகாயத், இன்று (ஏப்ரல் 5) அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றுள்ளார்.

‘நீங்கள் அறுவடைக்கு செல்லுங்கள்; நாங்கள் போராடுகிறோம்’ : விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் தொழிற்சங்கங்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குஜராத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி போராட்டத்தை நடத்துவார்கள். மாநில தலைநகர் காந்திநகரை முற்றுகையிடுவதற்கும் சாலைகளைத் கைப்பற்றுவதற்குமான நேரம் வந்துவிட்டது. தேவைப்படுமேயானால், நாங்கள் காவல்துறையின் தடுப்புகளையும் உடைத்தெறிய வேண்டியிருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

“குஜராத்தில் எந்தப் போராட்டங்களும் நடைபெறாததால், விவசாயிகள் இங்கு அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நீதிமன்றங்களிடமிருந்தும் எந்த ஆதரவும் இல்லை. விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றும் நல்ல லாபம் ஈட்டுகிறார்கள் என்றும் கூற வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறார்கள்.” என்று ராகேஷ் திகாயத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“ஜனநாயகத்தை கொலை செய்யும் பாஜக” – விவசாய சங்கத்தலைவர் வாகனம் மீது தாக்குதல்

மேலும், “பனஸ்காந்தாவில் விவசாயிகள் ஒரு கிலோ உருளைக்கிழங்கை ரூ .3 க்கு விற்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். இந்த விலை விவசாயிகளை மகிழ்வித்துவிடுமா? நம் விவசாயிகளின் மனதில் இருக்கும் அச்சத்தை அகற்றுவதற்காக நாங்கள் இங்கே வந்துள்ளோம். நாங்கள் அமைதியான முறையில் போராடுவோம்.” என்று ராகேஷ் திகாயத் கூறியுள்ளார்.

Source : PTI 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்