Aran Sei

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம்: ’முதல்வர் மோடியும் பிரதமர் மோடியும் முரண்பட்டு பேசுகிறார்கள்’ – ராகேஷ் திகாயத்

விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் போராட்டத்தில் உயிரிழந்த 750 விவசாயிகளுக்கும் நாடாளுமனறத்தில் ஒருமுறையாவது பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

நேற்று(அக்டோபர் 9), ‘கோபத்தின் விதைகள்: அச்சங்களும் உண்மைகளும்: விவசாயத்துறையில் நிலவும் நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது’ என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் ராகேஷ் திகாயத் பங்கேற்றுள்ளார். அப்போது, “விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கப் போராடி வருகிறார்கள். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை இருப்பதாக ஒன்றிய அரசு கூறி வருகிறது. ஒன்றிய அரசின் வார்த்தைகள் அனைத்தும் காகிதத்தில் மட்டும்தான் உள்ளது. நடைமுறைக்கு வரவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

“விவசாய சட்டங்களை நீக்கக் கோரி, ஓர் ஆண்டாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். இதில், 750 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த விவசாயிகளுக்காக ஒருமுறையாவது பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

நவராத்திரி திருவிழாவின் கடைசி நாளில் மோடி, அமித் ஷா கொடும்பாவி எரிக்கப்படும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

லக்கிம்பூர் கெரி வன்முறையில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மீது ஐபிசி 120பி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் பதவியிலிருந்து விலகி விசாரணையை எதிர்க்கொள்வதுதான் சரியாக இருக்கும் என்றும் ஆனால், அஜய் மிஸ்ராவோ தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் பதவியில் நீடித்துக்கொண்டிருக்கிறார், யாரும் அவரைக் கேள்வி கேட்க முடியவில்லை என்றும் ராகேஷ் திகாயத் சுட்டிக்காட்டியுள்ள்ளார்.

மேலும், “எந்த மண்டியில் வேண்டுமென்றாலும் விவசாய விளை பொருட்களை விற்க விவசாய சட்டத்தில் வசதி இருப்பதாக ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால், மத்தியப் பிரதசேத்தில் 182 மண்டிகள் நிதிச்சிக்கல் காரணமாக மூடப்பட்டுள்ளன. கிராமங்களுக்கு ஆளும் கட்சியினர் சென்று பார்ப்பதில்லை. டெல்லியில் அமர்ந்து கொண்டு சட்டத்தை இயற்றுகிறார்கள்” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

லக்கிபூர் விவசாயிகள் மரணம் குறித்து மௌனம் ஏன் ? – பிரதமர் மோடிக்கு கபில் சிபல் கேள்வி

“பிஹார் மாநிலத்தில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பே மண்டிகள் மூடப்பட்டுவிட்டன. ஆனால், பிஹாரில் விவசாயிகள் அனைவரும் பணக்காரர்களாக மாறிவிட்டதாக ஒன்றிய அரசு சொல்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு, குஜராத் மாநில முதலமைச்சராக மோடி இருந்த போது நிதிக்குழு உருவாக்கப்பட்டது. அதில் தலைவராக மோடி இருந்தார். குறைந்த பட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என்று அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு பரி்ந்துரை செய்தது மோடிதான். ஆனால், தற்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவர மோடியே மறுத்து வருக்கிறார். நாட்டுக்கே மோடி துரோகம் செய்கிறார்” என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கூறியுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்