Aran Sei

‘உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு பெறாமல் போராட்டம் ஓயாது’ – ராகேஷ் திகாயத்

விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு மாநில வாரியாக இழப்பீடும் வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் வலியுறுத்தியுள்ளார்.

இன்று(டிசம்பர் 4), உத்தரபிரதேச மாநிலம் கௌஷாபியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் கூட்டத்திற்கு முன்னதாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள ராகேஷ் திகாயத், “குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்க வேண்டும் என்கிற எங்கள் கோரிக்கையை ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இன்றைய சக்யுக்த் கிசான் மோர்ச்சா கூட்டத்தில் எந்த திட்டங்களையும் வகுக்கப்போவதில்லை. மாறாக, விவசாயிகள் போராட்டத்தை இனி எவ்வாறு முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதை மட்டுமே நாங்கள் விவாதிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

அடக்குமுறைகளுக்கு ஆளாகும் பழங்குடியினர் – பட்டா நிலத்தில் குடிசைகளை அகற்றிய வனத்துறை

ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கும் விவசாயிகளுக்கு இடையே நேற்று(டிசம்பர் 3) நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘கிறிஸ்தவ மக்கள் மீதான திட்டமிட்ட கொடூரத் தாக்குதல்கள் கலக்கமடையச் செய்கின்றன’ – எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆழ்ந்த கவலை

“விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற ஒப்புக்கொண்டாலும், ஹரியானா முதலவருக்கும் விவசாயிகளுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பஞ்சாப் மாநில அரசைப் போலவே, போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடும் மற்றும் வேலை வாய்ப்புகளையும் மாநில வாரியாக வழங்க வேண்டும்” என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் ஏஎன்ஐயிடம் கூறியுள்ளார்.

Source: ANI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்