பாரதிய ஜனதா கட்சி, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) ஆகியவற்றிடம் இருந்து நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கமான பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து, நேற்று(நவம்பர் 6), விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் காசிப்பூர் எல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள அவர், “பாஜக, ஆர்எஸ்எஸ்க்காரர்கள் நடிக்கிறார்கள். மக்கள் அவர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும். அவர்கள் எங்கு சென்றாலும் ஒற்றுமையை குலைத்து, மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவார்கள்” என்று கூறியுள்ளார்.
ஒன்றிய அரசின் விவசாயச் சட்டங்களை நீக்கக் கோரும் விவசாயிகள் போராட்டம் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைய உள்ளநிலையில், அடுத்த திட்டம் என்ன என்ற கேள்விக்கு, “ஒன்றிய அரசு பேச விரும்பினால், நல்லது. நாங்களும் பேசுவோம். இல்லை என்றால், போராட்டம் தொடரும்” என்று ராகேஷ் திகாயத் பதிலளித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினரின் முகாம்களாகும் சமுதாயக் கூடங்கள் – காஷ்மீர் தலைவர்கள் கண்டனம்
“போராட்டத்தை மேலும் தொடர்ந்து நடத்த தேவையான ஏற்பாடுகளை நாங்கள் செய்வோம். குளிர்காலம் வருவதால், விவசாயிகளிடம் அதிக உணவையும் உடைகளையும் கேட்போம். ஒன்றிய அரசு ஏன் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை? ஏறக்குறைய ஓர் ஆண்டாகிறது. இவ்வளவு பெரிய போராட்டங்கள் இதற்கு முன்பு நடந்ததை பார்த்திருக்கிறீர்களா? இந்தப் போராட்டத்தை அரசு எங்கு கொண்டு செல்ல விரும்புகிறது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “எங்களுடன் பேசுங்கள். நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று ராகேஷ் திகாயத் குறிப்பிட்டுள்ளார்.
Source: ANI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.