Aran Sei

‘அதிகாரத்தின் தாக்குதலே எங்களை பலப்படுத்தும்’ – விவசாயிகள் சங்கத்தலைவர் ராகேஷ் திகாயத்

ன்னுடைய வாகனங்கள் மீது பாஜக திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறது என்றும் விவசாய சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளுக்கு, இனிவரும் போராட்ட நாட்களில் அவர்கள் சந்திக்கவுள்ள சவால்கள் மற்றும் நேரப்போகும் துன்பங்கள் குறித்த நினைவூட்டலாக இத்தாக்குதல் இருக்கிறது என்றும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கூறியுள்ளார்.

நேற்று (ஏப்ரல் 3), உத்தரபிரதேச மாநிலம் பைமல்கேடா மாவட்டத்தில் கிசான் மஹாபஞ்சாயத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ராகேஷ் திகாயத், “உண்மையில், இதுபோன்ற தாக்குதல்கள்தான், எங்களை வலுப்படுத்தி, எங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும். இது எங்கள் இருப்பு தொடர்பான போராட்டம்.” என்று தெரிவித்துள்ளார்.

‘கோடை வெயிலுக்கு அஞ்சி வீடு திரும்ப மாட்டோம்; மின்விசிறிகளோடு களத்தில் இருப்போம்’ – ராகேஷ் திகாயத்

மகாபஞ்சாயத்து உரையைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசியவர், இதுபோன்ற மேலும் தாக்குதல்களுக்கு நாங்கள் மனதளவில் தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (ஏப்ரல் 2) ராஜஸ்தான் மாநிலம் அல்வர் மாவட்டத்தில், ராகேஷ் திகாயத்தின் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டதாகவும் இதனால், அவரது காரின் பின்புற விண்ட்ஷீல்டு சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

பாஜகவின் மாணவர் அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை (ஏபிவிபி) சேர்ந்தவர் ஒரு மாணவர் தலைவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்