Aran Sei

ஜன – 31 ஒன்றிய அரசை எதிர்த்து நாடு முழுவதும் துரோக தினம் கடைப்பிடிக்கப்படும் – ராகேஷ் திகாயத்

ன்றிய அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ள பாரதிய கிசான் யூனியன் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத், இதைக் குறிக்கும் வகையில் திங்களன்று(ஜனவரி 31) நாடு முழுவதும் துரோக தினம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் ராகேஷ் திகாயத், டெல்லியின் எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக நடத்தப்பட்ட விவசாயிகளின் போராட்டம் டிசம்பர் 9 அன்று ஒன்றிய அரசின் உறுதிமொழி கடிதத்தின் அடிப்படையில் திரும்பப் பெறப்பட்டது என்றும் ஆனால், உறுதிமொழி அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு இழைத்த துரோகத்தால் ஜனவரி 31ஆம் தேதி நாடு தழுவிய ‘துரோக தினம்’ கடைப்பிடிக்கப்படும். டிசம்பர் 9 அன்று ஒன்றிய அரசு கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் விவசாயிகளின் போராட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

‘விவசாயிகளே! பாஜகவிடம் எச்சரிக்கையாக இருங்கள்’ –அகிலேஷ் யாதவ்

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று விவசாயச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி, 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற ஒருங்கிணைந்த குழுவின் கீழ் டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் சங்கங்கள் போராட்டம் நடத்தின.

விவசாயச் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் மோடி கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிவித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலும் சட்டப்பூர்வமாக திரும்பப் பெறப்பட்டன. அதனையடுத்து, டிசம்பரில் டெல்லி எல்லைகளில் இருந்த போராட்டக்களங்களை விவசாயிகள் காலி செய்தனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்