Aran Sei

பெகசிஸ் தொடர்பாக பதிலளிக்க மாநிலங்களவையில் எழுப்பப்பட்டுள்ள கேள்வி – அனுமதியளிக்க கூடாது என அரசு கடிதம்

பெகசிஸ் ஸ்பைவேர் தொடர்பாக இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த் என்.எஸ்.ஓ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக என விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என மாநிலங்களவையில் கோரப்பட்டிருக்கும் கேள்வியை அனுமதிக்க கூடாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பல பொதுநல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளாதால், பிரச்னை நீதித்துறைக்கு உட்பட்டது என அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவையில் உறுப்பினர் பினாய் விஸ்வம் எழுப்பிய தற்காலிகமாக ஒப்புக்கொள்ளப்பட்ட கேள்விக்கு (பிஏக்யூ), மாநிலங்களவையின் ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என திட்டமிட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த கேள்வியை அனுமதிக்க கூடாது என இந்த வார தொடக்கத்தில் மாநிலங்களவை செயலகத்திற்கு ஒன்றிய அரசு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”அ) வெளிநாட்டு நிறுவனங்களுடன் துறை வாரியாக மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்களை குறித்து வெளியுறவு துறை அமைச்சர் தெரிவிக்க இயலுமா?

ஆ) வெளிநாட்டு நிறுவனங்களுடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சைபர் பாதுகாப்பு மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதாக இருந்தத்தா, இருப்பின் அதன் விவரங்கள்.

இ) நாடு முழுவதும் சைபர் பாதுகாப்பு மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க அரசு என்.எஸ்.ஒ குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக, அப்படியானால் அதன் விவரங்கள்” என பினய் விஸ்வம் கேள்வி எழுப்பியிருந்தார்.

மாநிலங்களின் கவுன்சில் நடைமுறை மற்றும் நடத்தை விதிகள் 47ஐ மேற்கொள்ளக் காட்டியுள்ள ஒன்றிய அரசு, “இந்தியாவின் அதிகார வரம்பின் எந்தவொரு நீதிமன்றத்தின் கீழ் நிலுவையில் இருக்கும் வழக்கு தொடர்பான கேள்வியைக் கேட்க கூடாது” என அந்த கடிதத்தில் அரசு தெரிவித்துள்ளது.

source: the wire

தொடர்புடைய பதிவுகள்:

பெகசிஸ் விவகாரத்தில் பல நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் ஒன்றிய அரசு மட்டும் மௌனம் காப்பதேன்?’ – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

பெகசிஸ் வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் உச்சநீதிமன்ற அதிகாரிகள் பெயர்கள்  – உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியின் பெயரும் இடம்பெற்றுள்ளது

பெகசிஸ்: பேரழிவு விளைவுகளை தடுக்க அரசியல் நடவடிக்கைகளால் மட்டுமே முடியும் – எழுத்தாளர் அருந்ததிராய்

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்