Aran Sei

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள், மறுப்புகள், வெளிநடப்பு – மாநிலங்களவையில் இன்று நடந்தது என்ன?

ணவீக்கம், விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பாக விவாதம் கோரி, மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

பணவீக்கம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க காங்கிரஸ் கோரியுள்ளது. அதற்கு, துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் அனுமதி மறுத்துள்ளார். இதைக் கண்டித்து, காங்கிரஸ் மற்றும்  இடதுசாரிகள் கட்சி உறுப்பினர்களோடு, சிறிய கட்சிகளின் உறுப்பினர்களும் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி, திமுக உள்ளிட்ட சில கட்சிகள், விவசாயிகள் போராட்டம் போன்ற விவசாய பிரச்சனைகளை விவாதிக்க அனுமதி கோரியுள்ளனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட, அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசு – வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கம்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்னையை எழுப்பி, அவை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

கேள்வி நேரம் இருப்பதால், உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாது என்று துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் கூறியுள்ளார்.

சகோதரர் மறைவால் தாயை சந்திக்க பிணை கோரிய ஆனந்த் டெல்டும்டே – நிராகரித்த நீதிமன்றம்

அதைத்தொடர்ந்து, விவசாய விளைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதியாக்கும் சட்ட முடிவு உள்ளிட்ட விவசாயிகள் பிரச்சனைகளை எழுப்ப மற்ற கட்சியினரும் முயன்றுள்ளனர். அவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டவே, வெளிநடப்பு செய்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்