Aran Sei

மியான்மர் அகதிகளை திருப்பி அனுப்புவது கொல்வதற்கு சமம் -மாநிலங்களவை உறுப்பினர் வான்லவெனா

மியான்மர் அகதிகள் குறித்து இந்திய உள்துறை அமைச்சகம் கொள்கை முடிவில் மாற்றம் கொண்டுவரவேண்டுமென மிசோரம் தேசிய முன்னணி கட்சியைச் சார்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வான்லவெனா தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட ரோஹிங்கிய அகதிகள் – மியான்மரில் இயல்பு திரும்பினால் திருப்பி அனுப்ப கோரிக்கை

மாநிலங்களவையில் இதுகுறித்து உரையாற்றிய வான்லவெனா, மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சியால் பாதிப்படைந்துள்ள 300க்கும் மேற்பட்ட மியான்மர் அகதிகளும், மக்களுக்கு ஆதரவான 1500 மேற்பட்ட காவல்துறையினரும் மிசோரம் மாநிலத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்து உள்ளார்கள் என்று கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் உதவியில்லாமலே மியான்மர் அரசும், தன்னார்வ அமைப்புகளும் மியான்மர் அகதிகளுக்கு உதவி வருவதாகவும் வான்லவெனா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளதாகத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

ரோகிங்கியா அகதிகள் – ஜம்மு கைதுகளை எதிர்த்து டெல்லியில் ஐ.நா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது

மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ள நான்கு மாநில அரசுகள் மியான்மார் அகதிகளை அனுமதிக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநிலங்களவையில் இதுகுறித்து பேசிய வான்லவெனா, “நாம் மியான்மர் அகதிகளை திருப்பி அனுப்புவது அவர்களை கொல்வதற்கு சமம் ” என்று தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மியான்மர் இராணுவ ஆட்சியின் அமைச்சருக்கு அழைப்பு விடுத்த இலங்கை – ஜனநாயக செயல்பாட்டாளர்கள் கண்டனம்

இந்திய உள்துறை அமைச்சகம் இதுகுறித்து கொள்கைமுடிவில் மனிதநேய அடிப்படையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என மாநிலங்களவையில் மிசோரம் தேசிய முன்னணி கட்சியைச் சார்ந்த வான்லவெனா தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்