ஜம்மு & காஷ்மீர் (ஜே&கே) லிருந்து தேர்ந்தேடுக்கப்படும் இந்திய குடிமையில் அதிகாரிகளை, அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் (ஏஜிஎம்யூடி) யூனியன் பிரதேசங்களுடன் இணைக்கும் உத்தரவை மாற்றியமைக்கும், ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2021, இன்று (பிப்ரவரி 8) மாநிலங்களவையில் நிறைவேறியது.
தமிழக மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை – படகினை அரசுடமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு
கடந்த வாரம் மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு தற்போது ஜம்மு & காஷ்மீருக்கு முழுமையாகப் பொருந்தும், இந்த மசோதா, யூனியன் பிரதேசங்களை நிர்வகிக்கும் அனுபவமுள்ள அதிகாரிகளைப் பெற ஜம்மு & காஷ்மீருக்கு உதவும் என மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷான் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மகனின் உடலைக் கேட்டு போராடிய தந்தை மீது வழக்கு – தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
ஜம்மூ & காஷ்மீரில் சுமார் 170 மத்திய அரசின் சட்டங்கள் ஜம்மு & காஷ்மீரில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இந்த மசோதா ஜம்மூ & காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் இருக்கும் அதிகாரிகளின் பலத்தை அதிகரிக்கும் எனக் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.