சத்ரபதி சிவாஜி மகாராஜின் வரலாற்றை திரிக்கும் வகையில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியும், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் 27 அன்று புனேவில் இராணுவத்தின் கட்டமைப்பு ஒன்றை திறந்து வைத்த அவர், “சிவாஜியை சாம்ராத் ராம்தாஸ் சுவாமி மற்றும் தாதோஜி கொண்டதேவ் ஆகியோர் விளையாட்டுகளில் பயிற்று வித்தனர். அதுவே அவரை தேசியளவில் வீரனாக்கியது” என்று கூறியிருந்தார்.
மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ள சம்பாஜி படை என்ற அமைப்பைச் சார்ந்த ஷிண்டே, “ராஜ்நாத் சிங்கின் கருத்து தவறான வரலாற்றை முன்வைப்பதாக உள்ளது. சிவாஜி தன் வாழ் நாளில் சாம்ராத் ராமதாஸ் சுவாமியைப் பார்த்ததே இல்லை. உயர்நீதிமன்றமும் அதை தெரிவித்துள்ளது. எனவே, ஆர்.எஸ்.எஸ் வரலாற்றாளர்கள் ராம்தாஸ் மன்னர்களை விளையாட்டில் பயிற்றுவித்தார் என கூற இயலாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று, கொண்டதேவ் சிவாஜி மகராஜிற்கு எப்போதும் குருவாக இல்லை, இது ஆர்.எஸ்.எஸ் வரலாற்றாளர்கள் பரப்பும் பொய் என்றும் , “இதுபோன்ற பொய்யைப் பரப்புவதற்கு ராஜ்நாத் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனவும் ஷிண்டே கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமோல் கோல்ஹே, “மக்களுக்கு சிறந்த மாநிலத்தையும் ஸ்வராஜ்யம் அமைக்கப்பதற்கு முழு நடவடிக்கைகளும் மேற்கொண்டதின் வாயிலாக அவர் தேசியளவில் வீரனாக உருப்பெற்றார்” என்றும் தெரிவித்துள்ளார்.
source:தி இந்து
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.