முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன், இடைக்கால ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் எழுதிய கடிதம் – தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்தத்துக்கு கடிதம் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 1999 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர்களைக் கடந்த 2018 லிருந்து விடுவிக்க வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், பேரறிவாளவன் தாக்கல் செய்துள்ள மனுவில், “இந்த வழக்கு முற்றிலும் அரசியல்மயப்பட்டுள்ளது. மனுதாரருக்கான நீதியை எதிர்பார்க்கும் இடமாக நீதித்துறையே உள்ளது. பேரறிவாளன் தனது 19 வயதில் ராஜிவ் காந்தி கொலைக்கு பேட்டரி வாங்கிக்கொடுத்தார் என்று கைது செய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கு, அதிகாரிகளால் சட்டப்படி விவாதிக்கப்பட்டதை விட அதிகமாக அரசியல்ரீதியாகவே விவாதிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்கு மாதங்களுக்கு முன்னர், பேரறிவாளன் விடுதலை குறித்து மாநில ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது “அசாதாரணமானது” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்ததாகவும், மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்திருந்ததாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.