Aran Sei

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்கூட்டியே விடுதலை செய்ய நளினி, ரவிச்சந்திரன் மனு தாக்கல் – ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் சிறையிலிருக்கு நளினி, ரவிச்சந்திரன் இருவரும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீது ஒன்றிய, மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம்  நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறி 1991 ஆம் ஆண்டு கைதானார் பேரறிவாளன். அவருடன் சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இளம்பெண் கொலை வழக்கில் உத்தரகாண்ட் பாஜக தலைவரின் மகன் கைது: கொலைக்கான ஆதாரங்கள் உள்ள சொகுசு விடுதியை ஏன் மாநில அரசு இடித்தது? – தந்தை கேள்வி

அனைவருக்கும் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கிய நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் பேரறிவாளனுக்கு பலமுறை பரோல் வழங்கி அரசு உத்தரவிட்டது. அதன் பின்னர் பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கை கடந்த மே மாதம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

பாஜகவை வீழ்த்த ‘மூன்றாவது அணி’ போதாது, ஒரு ‘முக்கிய முன்னணி’ தேவை: பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்

இந்த நிலையில் இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் 142 வது சட்டப்பிரிவின் மூலமாக தங்களையும் விடுதலை செய்யவும், பேரறிவாளனை போன்று தங்களையும் பிணையில் விடுவிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதனை தொடர்ந்து நளினி மற்றும் ரவிச்சந்திரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்தனர்.  நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பாக அளித்த மனு மீது ஒன்றிய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Source: thehindu

படுகுழியில் இந்திய பொருளாதாரம் | வரி பிடுங்கி பாஜக | Salem Dharanidharan Interview | BJP | PTR

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்