Aran Sei

‘நான் ஒருதடவ சொன்னா.. தயவு செய்து கேளு கண்ணா…’ : ரசிகர்களால் ரஜினிகாந்த் வேதனை

credits : the indian express

அரசியலில் களமிறங்க முடியாததற்கான காரணத்தை தெரிவித்து விட்டேன் என்றும் தன்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் நடிகர் ரஜினிகாந்த தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2017-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் இறுதியில் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும், தான் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் ரஜினி அறிவித்தார். அதன் பின்னர், அவர் தீவிர அரசியலில் களமிறங்குவது குறித்து தொடர்ந்து முரண்பட்ட கருத்துகளை கூறிவந்தார்.

பல்வேறு குளறுபடிக்கு இடையில் கடந்த ஆண்டு, டிசம்பர் 3-ம் தேதி, “இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை! மாத்துவோம்! எல்லாத்தையும் மாத்துவோம்!” என்ற வாசகத்துடன், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவதாக அறிவிப்பு விடுத்திருந்தார். மேலும் கட்சியைப் பற்றிய அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி வெளியிடப்படும் என்றும் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

’கொரோனா வருவதற்கு சாத்தியமுள்ள வேலைகளில் ஈடுபட வேண்டாம்’ – ரஜினிக்கு அப்போலோ அறிவுறுத்தல்

இதையடுத்து தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு கடந்த டிசம்பர் 29-ம் தேதி கட்சி தொடங்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரஜினி அரசியல் பிரவேசத்தை கைவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரை மீண்டும் அரசியல் களத்துக்கு வரக்கோரியும் ரஜினி ரசிகர்கள் ஜனவரி 10-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

ரஜினி தேர்தல் அறிக்கை : 90ஸ் கிட்ஸ் முதல் ரிடயர்ட் நடிகர்கள் வரை-யார் யாருக்கு என்னென்ன

ரஜினி மக்கள் மன்றத்தின் எந்த நிர்வாகியும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள கூடாது என்று ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் அறிவுறுத்தினர். ”நாம் அனைவரும், தலைவரின் முடிவுக்குக் கட்டுப்பட்டு அவரிடமிருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை பொறுமை காக்க வேண்டும். மக்கள் மன்றத்தின் உண்மையான காவலர்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது, மீறிக் கலந்துகொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி – ரத்தஅழுத்த மாறுபாட்டிற்காக சிகிச்சை

இதனிடையே திட்டமிட்டபடி ஜனவரி 10-ம் தேதி ரஜினி ரசிகர்கள் காவல்துறையின் அனுமதிப் பெற்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர். ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ராமதாஸ் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சென்னை வந்திருந்தனர்.

”இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை”, ”வா தலைவா வா”, ”அரசியலுக்கு வாங்க தலைவா”, ”முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் தலைவா”, போன்ற கோஷங்களை எழுப்பி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுனர்.

டிகோடிங் ரஜினிகாந்த்: அரசியல் ஹீரோவா? வில்லனா? – மகிழ்நன் பாம

இந்நிலையில் அரசியலுக்கு வர முடியவில்லை என்ற காரணத்தை கூறியும் மீண்டும் ரசிகர்கள் வற்புறுத்துவது வேதனையளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அவருடைய ரசிகர்களின் போராட்டத்தை கண்டித்து, இன்று (ஜனவரி 11) நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,“தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளாத மக்கள் மன்றத்தினர்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்.நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று நடிகர் ரஜினிகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்