Aran Sei

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளரை சந்தித்த பாஜக உறுப்பினர் – திரிணாமுல் காங்கிரசுக்கு திரும்புகிறார்களா பாஜகவினர்?

மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவிற்கு சென்ற ரஞ்சிப் பானெர்ஜீ திரிணாமூல் கட்சியின் செய்தி தொடர்பாளரைத் சந்தித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மோடியை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதே எனது அடுத்த அரசியல் நகர்வு – மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

ஏற்கனவே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவிற்கு சென்ற முகுல் ராய், மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியுள்ள நிலையில் ரஞ்சிப்பின் இந்த சந்திப்பு அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும், தற்போது நடந்த தேர்தலில் டோம்ஜுர் பகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு ரஞ்சிப் பானெர்ஜீ தோல்வியடைந்ததாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘மேற்குவங்க கலவரத்தில் சூரையாடப்பட்ட தலித், பழங்குடிகளை மீளக்குடியமர்த்த வேண்டும்’ – குடியரசுத் தலைவருக்கு கல்வியாளர்கள் கடிதம்

மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ள ரஞ்சிப் பானெர்ஜீ, நட்பு ரீதியாகவே இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும் இதற்கு அரசியல் ரீதியான காரணங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளதாகவும், தான் கடந்த ஜனவரி மாதம் பாஜகவில் இணைந்ததாகவும், தேர்தலில் வேளையில் இருந்ததால், தற்போது எனக்கு நேரம் கிடைத்தது என்று கூறிவுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்