Aran Sei

ராஜஸ்தான்: ஆதிக்கச் சாதியினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியல் சாதி பெண்

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டியல் சாதி பெண்ணை ஆதிக்க சாதியினர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை குறித்த சர்ச்சை கருத்து – மன்னிப்பு கோரினார் ராஜஸ்தான் சட்டத்துறை அமைச்சர்

குற்றம் சாட்டப்பட்டுள்ள லாலு தாக்கூர், தன் சிங் தாக்கூர், விபின் தாக்கூர், மோஹித் தாக்கூர், சச்சின் தாக்கூர், லோகேந்திர சிங் தாக்கூர் ஆகிய 5 பேரின் மீதும் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியல் சாதி பெண் தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் விவசாய வேலை முடிந்து திரும்பி வருகையில், மேலே குற்றம் சாட்டப்பட்ட 5பேரும் துப்பாக்கியோடு தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. தடுத்து நிறுத்தி தாக்கியபோது  பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தன்னோடு வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆண்களின் மாநிலமாக ராஜஸ்தான் இருப்பதால்தான் பாலியல் வன்கொடுமை அதிகளவில் நடக்கிறது: ராஜஸ்தான் அமைச்சர் கருத்து

பின்னர், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும், அந்த பெண்ணுடைய குழந்தையின் கண் முன்னே துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலத்தில் அந்த பெண் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 376-டி (கும்பல் பாலியல் வன்கொடுமை), மற்றும் பட்டியல் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்பு சட்டம், 1989 ஆகியவற்றின் கீழ் காஞ்சன்பூர் காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டியுள்ளது.

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பாதிரியார் பிராங்கோவை விடுதலை செய்ய கோட்டயம் நீதிமன்றம் உத்தரவு

குற்றம் சாட்டப்பட்டவர்களும் பாதிக்கப்பட்ட குடும்பமும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவ்வழக்கில் இதுவரை யாரையும் காவல்துறை கைது செய்யவில்லை என்று தோல்பூர் மாவட்டத்தின் கிராமப்புற அதிகாரி விஜய் குமார் சிங் கூறியுள்ளார்.

Source : PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்