Aran Sei

ராஜஸ்தான் : நீண்ட போராட்டத்திற்கு பின் குஜ்ஜார் மக்களுக்கு இட ஒதுக்கீடு

குஜ்ஜார் இன மக்களின் இடஒதுக்கீட்டு ஒப்பந்தத்தை நேற்று (நவம்பர் 11) ராஜஸ்தான் அரசு கையெழுத்திட்டுள்ளது.11 நாள் நீடித்த தொடர் போராட்டத்திற்குப் பிறகு, குஜ்ஜார்  இன மக்களின் கோரிக்கையான வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீட்டை ராஜஸ்தான் அரசு அனுமதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்று ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

குஜ்ஜார் மக்களுக்கு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, இதற்கு முந்தைய போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட குற்ற வழக்குகளைத் திரும்பப் பெறுதல், அதில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கான மறுவாழ்வு ஆகிய முக்கிய அம்சங்களை இந்த ஒப்பந்தம் கொண்டுள்ளது.

உயர் சாதியினருக்காக பறிக்கப்படும் OBC,SC,ST பிரிவினரின் இடஒதுக்கீடு

ஆறு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமைச்சரவை துணைக்குழுவுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்றும் ராஜஸ்தான் மாநில அரசு சார்பில் எரிசக்தி அமைச்சர் பி.டி.கல்லா மற்றும் மாநில அமைச்சர்கள் டிக்கா ராம் ஜூலி மற்றும் சுபாஷ் கார்க் போன்றோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்று ’தி இந்து’  தெரிவித்துள்ளது.

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குஜ்ஜார் மக்கள் (நன்றி : DNA India)

ஒப்பந்தம் கையெழுத்தாகும் பொழுது, பரத்பூர் மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை ரயில் பாதையை ஆக்கிரமித்து நடத்திக்கொண்டிருந்த போராட்டத்தை குஜ்ஜார் மக்கள் தொடர்ந்துக்கொண்டிருந்தனர். அதை அடுத்து, குஜ்ஜார் மக்கள் தலைவர்களில் ஒருவரான விஜய் பெயின்ஸ்லா, போராட்டம் நடந்த இடத்தில் உள்ள தங்கள் மக்களிடம் ஆலோசித்த பின்னரே, அதை நிறுத்துவதற்கான முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் என்று ’தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.

“இடஒதுக்கீட்டுக்காக வரலாறு காணாத போராட்டம்” – ராமதாஸ் அறிவிப்பு

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், நேற்று (நவம்பர் 11) இரவு, குஜ்ஜார் மக்கள் தலைவரான கிரோரி சிங் பெயின்ஸ்லா, முதலமைச்சர் அசோக் கெக்லாட்டை அவரது அரசு இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளார்.

ஒப்பந்தத்தின்படி ஆறு கோரிக்கைகளை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்படும். அந்த குழு தற்போது உள்ள  வேலை வாய்ப்புகளில் மிகவும் பின்தங்கிய பிரிவின் (எம்பிசி) இடஒதுக்கீட்டை  5 சதவீத  விரிவாக்குவது தொடர்பாக ஆய்வு செய்யும் என்றும் இதை போல மற்ற மாநிலங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சட்டப் படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை – டி.ஆர்.பாலு கடிதம்

மேலும், 1,252 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு வழக்கமான ஊதியம் வழங்கப்படும் என்றும் நிலுவைத்தொகை பிரச்சனைகள் நீதிமன்ற வழக்குகளின் முடிவுகளின் படி தரப்படும் என்றும் ஒப்பந்தத்தில் உள்ளதாக ’தி இந்து’  தெரிவித்துள்ளது.

முந்தைய போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறையால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதி உதவியும் அவர்களில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். போராட்டக்காரர்களுக்கு  எதிராக போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவும் மாநில தலைநகரான ஜெய்பூரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கான விடுதிகளை அதிகப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளன.

எஸ்சி, எஸ்டி சட்டம் – உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் – திருமாவளவன்

கடந்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி, ராஜஸ்தான் சட்டமன்றம் ’பின்தங்கிய பிரிவினர் திருத்த சட்டம், 2019-ஐ (மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில், இடங்களை ஒதுக்குதல் மற்றும் மாநில அரசு பணிகளில்  நியமனங்கள் மற்றும் பதவிகளை ஒதுக்குதல்) நிறைவேற்றியது. குஜ்ஜார் மக்களுடன் பஞ்சாரா, காடியா-லோகர், ராய்கா மற்றும் கடரியா போன்ற நான்கு நாடோடி சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் இதனால் பயன்பட்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்