Aran Sei

ராஸ்தானில் சாலை விபத்தில் உயிரிழந்த சமூக செயற்பாட்டாளர் – உண்மைகளை வெளிக்கொண்டுவந்ததால் கொல்லப்பட்டத்தாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு

ராஜஸ்தான் மாநிலத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்  ராய் சிங் குர்ஜார் சாலை விபத்தில் மரணமடைந்துள்ள நிலையில், அவர் கடந்த 5 ஆண்டுகளாக வெளிக்கொண்டு வந்த உண்மையின் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

குடும்பத்தினர் அளித்துள்ள புகாரின் பெயரில், கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக ராஜஸ்தான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

‘இந்து மதத்திற்கு அச்சுறுத்தல் நிலவுகிறது என்பது கற்பனை’- ஆர்.டி.ஐயில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்

2017 ஆம் ஆண்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கயா நாயுடு, மாதிரி கிராம திட்டத்தின் கீழ் சிறந்த கிராமமான திதர்வாசா கிராம பஞ்சாயத்தின் வளர்ச்சி திட்டங்களில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கு எதிராக 2019 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் குரல் கொடுத்தார்.

பின்னர், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் செய்த முறைகேடுகள் தொடர்பாக குர்ஜார் குரல் கொடுத்து வந்தார்.

சனிக்கிழமை இரவு, இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த குர்ஜார் மீது ஆட்டோ ரிக்‌ஷா மோதியதால், அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது.  ஜஹலாவர் மாவட்ட மருத்துவமனைக்குயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நீட் தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – முக்கிய அம்சங்கள் என்ன?

”ராய் சிங் குர்ஜார் தலையில் ஏற்பட்ட காயம் தவிர அவரது உடலில் எங்கும் காயமோ அல்லது சிராய்ப்போ இல்லை. மேலும் சம்பவம் நடைபெற்றதாக சொன்ன இடத்தில், விபத்து நடைபெற்றதற்கான அறிகுறியே இல்லை” என ராய் சிங் குர்ஜாரின் சகோதரர் சுஜன் சிங் குர்ஜார் தெரிவித்துள்ளார்.

குர்ஜார் உயிரிழந்தது சாலை விபத்து எனக் கூறப்படும் நிலையில், சுஜன் சிங் குர்ஜார் அளித்த புகாரில் பெயரில் சந்திர சிங், கலுலால் பீல், தினேஷ் பட்டிடார், நைபால் சிங் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) மற்றும் 34 (பொதுவான நோக்கத்திற்காக பலர் சேர்ந்து செய்த செயல்) கீழ் முதல் தகவல் பதியப்பட்டுள்ளதாக ஜஹல்ரப்பிரதான் காவல் நிலையத்தின் நிலைய அதிகாரி ஜித்தேந்திர சிங் செகாவத் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் செருப்புகளை எடுக்கத்தான் அரசு அலுவலர்கள் இருக்கிறார்கள் – உமா பாரதி

”பிரேத பரிசோதனை முடிந்து, ராய் சிங் குர்ஜாரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவரும் போதே தெரியவரும்” என அவர் கூறியுள்ளார்.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்