Aran Sei

உத்தர பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் வன்முறை – போராடிய விவசாயிகள்மீது காவல்துறை தடியடி

குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரிசியைக் கொள்முதல் செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து போராட்டம் செய்ய முயன்ற ராஜஸ்தான் விவசாயிகள்மீது, அம்மாநில காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.

நேற்று (அக்டோபர் 4), தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் விவசாயிகள் நுழைய முயன்றபோது, நுழைவு வாயில் காவல்துரையால் மூடப்பட்டுள்ளது.

“சில விவசாயிகள் தடைகளை தாண்டி ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்ததால், அவர்கள்மீது தடியடி நடத்த வேண்டியதாயிற்று” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு பிறகு, விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லக்கிம்பூர் கேரி வன்முறை – விவசாயிகளை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்திக்கு தடை விதித்த காவல்துறை

இத்தடியடி குறித்து பேசியுள்ள சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் ஹனுமன்கர் மாவட்ட குழு உறுப்பினர் ரகுவீர் சிங் வர்மா,  “குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரிசியை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரி வருகின்றனர். விவசாயிகள் அமைதியான வழியில்தான் போராடினர். ஆனால், காவல்துறை அவர்கள்மீது தடியடி நடத்தியது” என்று கூறியுள்ளார்.

மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடி வரும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா செயற்பட்டு வருகிறது.

பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசத்தைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்திலும் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்