Aran Sei

“ஜனநாயகத்தை கொலை செய்யும் பாஜக” – விவசாய சங்கத்தலைவர் வாகனம் மீது தாக்குதல்

பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாத்தின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடைபெற்றதை அடுத்து, அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதற்காக நான்கு பேரைத் தடுப்பு காவலில் ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டம், ஹர்சோலியில் விவசாயிகள் பஞ்சாயத்து கூட்டங்களில் கலந்துகொள்ள சென்ற ராகேஷ் திகாத்தின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் காரின் முன்பக்க கண்ணாடி  சேதமடைந்துள்ளது.

இது தொடர்பாக அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதற்காக உள்ளூர் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்ட நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திமுக தலைவர் மகள் வீட்டில் வருமானவரி சோதனை – கைப்பற்றிய பணத்தை திரும்ப அளித்த அதிகாரிகள்

“ஆல்வார் மாவட்டம் பன்சூர் பகுதியில் உள்ள ததர்பூர் கிராசிங் பகுதியில் பாஜக.வின் குண்டர்களால் ஒரு கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜனநாயகம் கொலை செய்யப்பட்ட புகைப்படங்கள்,” என்று திகாயத் இந்தியில் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது ராஜஸ்தான் முதலமைச்சர்  அசோக் கெலாட், “ஆல்வாரில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் மீது பாஜக மக்கள் நடத்திய தாக்குதல் கண்டிக்கத்தக்கது, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

விவசாயி தரப்பில் இதுவரை எந்தப் புகாரும் பதிவு அளிக்காததால், இந்தச் சம்பவத்தில் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என கிஷன்கர் வாஸ் வட்ட அதிகாரி அதுல் அகிரே தெரிவித்தார்.

மேலும், ஆரம்ப கட்ட விசாரணையின்போது துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்