Aran Sei

ராஜஸ்தான்: பட்டியல் சமூக அரசு அதிகாரியை தாக்கிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ – கைது செய்த காவல்துறை

நேற்று (மார்ச் 31) ராஜஸ்தானின் கோட்டா நகரத்தில், பட்டியல் சமூக அரசு வன அதிகாரியான ரவி மீனா என்பவரை பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவானி சிங் ரஜாவத் தாக்கியுள்ளார். இதனையடுத்து பவானி சிங் ரஜாவத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான்: மீசையுடன் வலம் வந்ததால் கொலை செய்யப்பட்ட பட்டியலின இளைஞர்

பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவானி சிங் ரஜாவத் தனது ஆட்சிக்காலத்தில், வட்டார வளர்ச்சி நிதியில் இருந்து நிதி ஒதுக்கிக் கட்ட துவங்கிய சாலை சீரமைப்புப் பணி நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாவட்ட வன அதிகாரி அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அந்த சமயத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரசு அதிகாரியைப் பவானி சிங் ரஜாவத் தாக்கியுள்ளார்.

பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவானி சிங் ரஜாவத் கைது செய்யப்பட்டதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

பஞ்சாப்: நிரப்பப்படாத எஸ்சி/எஸ்டி ஆசிரியர் பணியிடங்கள் – ஓபிசி பிரிவைக் கொண்டு நிரப்ப கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

கோட்டா மாவட்ட வன அதிகாரி ரவி மீனா கொடுத்த புகாரின் அடிப்படையில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை காவல்துறை பதிவு செய்துள்ளது.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்