Aran Sei

‘மாநிலங்களுக்கு தேவையான நிலக்கரியை வழங்க ஒன்றிய அரசு தவறிவிட்டது’- ராஜஸ்தான் அரசு குற்றச்சாட்டு

மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க போதுமான அளவு நிலக்கரியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான் எரிசக்தித்துறை அமைச்சர் பிடி கல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, நேற்று(அக்டோபர் 14), பிடி கல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், கோல் இந்தியா நிறுவனத்தின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு ராஜஸ்தான் மாநில அரசிடம் இருந்து எந்த நிலுவையும் பாக்கி இல்லை என்றும் விநியோகிக்கப்படும் நிலக்கரிக்கு, உரிய நேரத்தில் ராஜஸ்தான் அரசு பணம் செலுத்தி வருகிறது என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் அதிகரிக்கும் நிலக்கரி பற்றாக்குறை – இருளில் மூழ்கும் மாநிலங்கள்

“ஒப்பந்தத்தின்படி மாநிலங்களுக்கான நிலக்கரியை சரியான நேரத்தில் வழங்குவது ஒன்றிய அரசின் பொறுப்பு. ஆனால் கடந்த பல நாட்களாகவே, கோல் இந்தியா லிமிடெட் நிறுவனங்கள் ஒப்பந்தத்தின்படி தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு ஏற்ப நிலக்கரியை வழங்கவில்லை” என்று பி.டி. கல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.

“ராஜஸ்தான் மட்டுமின்றி நாட்டின் பல மாநிலங்களிலும் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில அனல் மின்நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்து வருவது மின்சார பற்றாக்குறையால் அல்ல நிலக்கரி பற்றாக்குறையால். இது ஒன்றிய அரசு தேவையான உரிய நேரத்தில் நிலக்கரியை விநியோகிக்க தவறியதால் எழுந்த நெருக்கடி. அனல் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள நிலக்கரி பற்றாக்குறை ஒரு தேசிய நெருக்கடியாக மாறியுள்ளது” என்று ராஜஸ்தான் எரிசக்தித்துறை அமைச்சர் பிடி கல்லா தெரிவித்துள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்