Aran Sei

குழந்தை திருமணத்தைப் பதிவு செய்ய அனுமதிக்கும் ராஜஸ்தான் அரசின் சட்டத்திருத்தம் – பள்ளி படிப்பைப் பாதிக்கும் என என்சிபிசிஆர் குற்றச்சாட்டு

குழந்தைகள் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக பதிவு செய்ய அனுமதிக்கும் வகையில் ராஜஸ்தான் அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத்திருத்தம் மைனர் சிறுமிகளின் பள்ளி படிப்பு மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கும் என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிற்கு அந்த அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

குழந்தை திருமணம் நடைபெற்ற பிறகு ஒரே இடத்தில் 30 நாட்களுக்கு அதிகமாக ஒரே இடத்தில் தங்கியிருக்கும் பட்சத்தில், அந்த பகுதியைச் சேர்ந்த திருமண பதிவு அலுவலர்மூலம் திருமணத்தைப் பதிவு செய்யும் வகையில் திருமண பதிவு (திருத்த) மசோதா 2021ஐ ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது.

குழந்தை திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யலாம் – ராஜஸ்தான் அரசு புதிய சட்ட திருத்தம்

இந்த சட்டத்திருத்தம், ராஜஸ்தானில் குழந்தைகள் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கிறது என என்சிபிசிஆர் குற்றம்சாட்டியுள்ளது.

”21 வயது பூர்த்தியடையாத மணமகனுக்கும் 18 வயது பூர்த்தியடையாத மணமகளுக்கும் திருமணம் நடைபெற்றால், அதை அவர்களின் பெற்றோர்கள் பதிவு செய்யலாம்” என சட்டத்திருத்ததில் சொல்லப்பட்டிருப்பதாக, என்சிபிசிஆர் தெரிவித்துள்ளது.

இந்த சட்டத்திருத்தம் சிறார்களுக்குக் கடுமையான உடல், உளவியல் மற்றும் சமூக தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது கவலையாக உள்ளது.

Source : NDTV

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்