Aran Sei

ராஜஸ்தான்: இந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வகுப்புவாத மோதலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு

நேற்று (மார்ச் 2) ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்து புத்தாண்டை கொண்டாடுவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து வகுப்புவாத மோதல்கள் வெடித்தன என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிரித்துக் கொண்டே சொல்வது வன்முறை கருத்தாகாது – டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

வகுப்புவாத வன்முறையில் ஒரு சில கடைகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டதாகவும், சுமார் 14 பேர் காயமடைந்துள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்துறை ஆணையர் ஹவா சிங் குமாரியா தெரிவித்துள்ளார்.

ஆனால் 35 பேர் காயமடைந்ததாக கரௌலியின் காவல் கட்டுப்பாட்டு அறை முதலில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கரௌலி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் இணையச் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மத்தியபிரதேச கர்பா மைதானத்திற்குள் நுழைந்த இஸ்லாமிய சிறுவன் – வாய்தகராறு வகுப்புவாத கலவரமானது

ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா மற்றும் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் பொதுமக்களிடம் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

ராஜஸ்தானில் அமைதியை உருவாக்க இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர் உட்பட பிற அனைத்து மதத்தினரும் தங்களது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

வகுப்புவாதத்தை ஏற்படுத்த வரலாற்றைத் திரிக்கும் வலதுசாரிகள் – மதமாற்ற திருமணங்களும் சில விளக்கங்களும்

ராஜஸ்தானின் முன்னாள் முதலமைச்சரும், பாஜக தலைவருமான வசுந்தரா ராஜேவும் இந்த வகுப்புவாத கலவரத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ராஜஸ்தானில் வெறுப்பு மனப்பான்மை வளர அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்