ராஜஸ்தான் மாநிலத்தில் அனைவருக்கும் விரைவாகத் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய, தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய இருப்பதாக, அம்மாநில முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் தெரிவித்தார்.
மாநிலத்தில் கொரோனா நிலைமையை மறு ஆய்வு செய்ய நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய அசோக் கெஹ்லாட், ”கொரோனா பரவலை தடுப்பதற்கும், இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கும், தடுப்பூசி செலுத்தும் வேகத்தை விரைவுபடுத்த வேண்டியது அவசியம்” என வலியுறுத்தினார்.
தடுப்பூசிகள் தடையின்றி கிடைப்பதற்கான அனைத்து வழிகளையும் பரிசீலிக்க வேண்டும் என அவர் கூறினார்.
மாநில மக்களுக்கு விரைவாகத் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதால், தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது பற்றியும் அரசு பரிசீலிக்கும் என அசோ கெஹ்லாட் தெரிவித்தார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.