Aran Sei

கொரோனாவில் மீண்டவர்களுக்கு அதிகரித்து வரும் மைகோர்மைகோசிஸ் நோய் – தொற்றுநோயாக அறிவித்த ராஜஸ்தான் அரசு

ராஜஸ்தானில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு பரவும் ‘பிளாக் பங்கஸ்’ எனப்படும் ’மைகோர்மைகோசிஸ்’ பாதிப்பு அதிகரித்து வருவதால் மைகோர்மைகோசிஸை தொற்று நோயாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

மைகோர்மைகோசிஸ் பாதிப்பு தொடர்பான ஒவ்வொரு பாதிப்பையும் சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

அம்மாநிலத்தில், தற்போது 100க்கும் அதிகமானோர் மைகோர்மைக்கோஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சவாய் மன் சிங் பகுதியில் இதற்காக சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் புதிய அமைச்சரவை – முதல்முறையாக பட்டியலினத்தை சேர்ந்தவர் தேவசம்போர்டு அமைச்சராக நியமனம்.

ராஜஸ்தான் தொற்றுநோய் சட்டம் 2020, கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள முதன்மை சுகாதார செயலாளர் அகில் அரோரா, ”மைகோர்மைகோசிஸ் பாதிப்பைத் தொற்று நோயாக அறிவித்திருப்பதன் மூலம், கொரோனா சிகிச்சையுடன் சேர்ந்து ஒரு ஒருங்கிணைந்த சிகிச்சையைச் சேர்ந்து வழங்க முடியும்” என கூறியுள்ளார்.

திரவ ஆக்சிஜன் அல்லது ஆக்சிஜன் செறிவூட்டிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களுக்கு பக்க விளைவாக மைகோர்மைகோசிஸ் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, நல்ல தரமான ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்குவதையும், அவற்றைப் பயன்படுத்துவதில் போதிய பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதையும் உறுதி செய்யுமாறு மருத்துவமனைகளுக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்