Aran Sei

‘மதுபானம், முத்திரைத் தாள் பதிவில் கூடுதல் வரிகள் மூலம் பசு தொழுவங்களுக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு’ – ராஜஸ்தான் அரசு

ராஜஸ்தான் மாநிலத்தில், முத்திரைத் தாள் பதிவு மற்றும் மது விற்பனையில் பசு பாதுகாப்பிற்கென கூடுதல் வரி விதிக்கப்பட்டதன் காரணமாக, அம்மாநிலத்தில் உள்ள பசு தொழுவங்களுக்கு மாநில அரசிடமிருந்து 1,500 கோடி ரூபாய்க்கு மேல் நிதி கிடைத்துள்ளது.

முந்தைய அரசான பாஜக, பசு பாதுகாப்பிற்கு நிதி திரட்டும் வகையில், முத்திரைத் தாள் பதிவு மற்றும் மதுபானங்களுக்கு கூடுதல் வரி விதித்தது. அதைத்தொடர்ந்து, 2018 டிசம்பர் மாதம் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த கூடுதல் வரி தொடர்ந்து வருகிறது.

 

கர்நாடகா பசுவதை தடுப்பு சட்டம் – கிழித்தெறியப்பட்ட நகல், பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றப்பட்டது

இந்நிலையில், நேற்று (மார்ச் 10), ராஜஸ்தான் சட்டபேரவையில், இது தொடர்பாக எழுப்பப்பட்ட  கேள்விக்கு பதிலளித்த மாநில நிதித்துறை, 2015-16 முதல் 2020-21 ஜனவரி மாதம் வரை, முத்திரைத் தாள் பதிவில் பசு பாதுகாப்பிற்கென வசூலிக்கப்பட்ட கூடுதல் வரியால் மாநில அரசிற்கு ரூ .1,242.56 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக கூறியுள்ளது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அச்செய்தியில், 2018-19 முதல் 2020-21 ஜனவரி வரையிலான காலகட்டத்தில், மதுபான விற்பனையில் கூடுதல் வரி வசூலித்ததன் வழியாக மாநிலத்திற்கு ரூ.1017.8 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றும்   இந்த வரியின் காரணமாக, முத்திரைத் தாள் பதிவு மற்றும் மது விற்பனையில், 2015-16 ஆம் ஆண்டு முதல் அரசிற்கு மொத்த ரூ .2,259.64 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றும் நிதித்துறை தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சுற்றித்திரியும் பசுகளுக்கு 20 பாதுகாப்பு முகாம் – 12 கோடி ஒதுக்கிய உத்தரப்பிரதேச அரசு

மதுபான விற்பனைக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டதன் காரணமாக, மாநிலத்திலேயே ஜெய்ப்பூர் மற்றும் ஆல்வார் மாவட்டங்களிலிருந்து அதிகளவிலான வருவாய் கிடைத்துள்ளது என்றும் தற்போதைய நிதியாண்டில், ஜனவரி 31 வரை, ஜெய்ப்பூரில் மது விற்பனையில் விதிக்கப்பட்ட பசு பாதுகாப்பு கூடுதல் வரியின் வழியாக ரூ .174 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது என்றும் நிதித்துறையின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த கூடுதல் வரிகள் வழியாக வசூலிக்கப்பட்ட வருவாயிலிருந்து, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பசு தொழுவங்களுக்கு ரூ .1.511.31 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அதில், ரூ.1500.46 செலவிடப்பட்டுள்ளது என்றும் அப்பதிலில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்