எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள்களின் விலையை உயர்த்தி, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் நிவாரணத்தின் பலனை பூஜ்ஜியமாக்கிவிடும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக, தனது டிவிட்டர் பக்கத்தில், “பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு எரிபொருள் விலையை மேலும் குறைக்க வேண்டும். இதன் காரணமாக மாநிலங்களின் மதிப்புக்கூட்டு சேவை வரியானது அதுவாகவே அதே விகிதத்தில் குறையும். கலால் வரியை குறைக்கும் ஒன்றிய அரசின் நவம்பர் 4 ஆம் தேதி முடிவின் காரணமாக, மாநிலத்தின் மதிப்புக்கூட்டு சேவை வரி பெட்ரோல் லிட்டருக்கு 1.8 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 2.6 ரூபாயும் குறையும். அதனால், மாநிலங்களுக்கு ஆண்டுக்கு 1,800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது” என்று அசோக் கெலாட் கூறியுள்ளார்.
“பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்துவதை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும். இல்லையெனில், தீபாவளி அல்லது ஐந்து மாநில சட்டபேரவை தேர்தல்களுக்கு பின், எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தி, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் நிவாரணத்தின் பலனை பூஜ்ஜியமாக்கிவிடும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.
நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
“கலால் வரியிலிருந்து அனைத்து மாநில அரசுகளும் பெறும் பங்கை ஒன்றிய அரசு ஏற்கனவே குறைத்துள்ளது. இதுபோக, கொரோனா தொற்றின் காரணமாக மாநிலங்களின் வருவாயில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திற்கு தரப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை சுமார் ரூ.5,963 கோடியை ஒன்றிய அரசு இன்னும் வழங்கவில்லை” என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.