Aran Sei

பாஜக மிரட்டலால் வேட்புமனுவை திரும்ப பெற்ற சுயேச்சை வேட்பாளர் – உயிருக்கு ஆபத்து என ராஜஸ்தான் முதல்வருக்கு கடிதம்

ராஜஸ்தான் மாநிலம் சகாரா சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் லாதுலால் பிடாலியா, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளார். பாஜக கட்சியின் மிரட்டல் காரணமாகவே வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் அசோக் கெஹ்லாட்டிற்கு அவர் எழுதியுள்ள கடித்ததில், ”தேர்தலில் இருந்து வாபஸ் பெற பாஜக அழுத்தம் கொடுத்ததால் வேட்புமனுவை திரும்பப் பெற்றேன். என் குடும்பத்தினருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக லாதுலால் பிடாலியாவின் கருத்தை அறிய முயன்றபோது தொடர்பு கொள்ள முடியவில்லை.

2021- 22 ஆம் கல்வி ஆண்டில் 9-12 ஆம் வகுப்பு பாடத்திட்டம் குறைக்கப்படாது- மத்திய மேல்நிலை கல்வி வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கைலாஷ்  திரிவேதி உயிரிழந்ததால் நடைபெற இருக்கும்  சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கைலாஷ் திரிவேதியின் மனைவி காயத்ரி தேவி போட்டியிடுகிறார்.

பாஜகவில் வாய்ப்பு கிடைக்காமல் தனித்து போட்டியிடும் லாதுலால் பிடாலியா, கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வாய்ப்பு கிடைக்காமல் தனித்து போட்டியிட்டு மூன்றாம் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : India Today

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்