Aran Sei

‘ஹர ஹர மோடி’ – பிரதமர் மோடியொரு சிவ அவதாரமென ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடியை சிவனின் அவதாரம் என சொன்னால் அது மிகையாகாது என்று பாஜகவைச் சேர்ந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினர் கியான் சந்த் பராக் தெரிவித்துள்ளார்.

நேற்று (மார்ச் 21), ராஜஸ்தான் சட்டப்பேரவையில் ‘நிதி மசோதா’ மீதான விவாதத்தின்போது கியான் சந்த் பராக் கூறியுள்ள இக்கருத்திற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

“ஒரு காலத்தில் ஹர ஹர மகாதேவ் என முழங்கப்பட்டது, தற்போது ஹர ஹர மோடி என முழக்கம் எழுப்பப்படுகிறது. மோடி மகாதேவனின் (சிவனின்) அவதாரம் என்று சொன்னால் அது மிகையாகாது. ஹர ஹர ராமா மற்றும் ஹர ஹர கிருஷ்ணா போன்ற முழக்கங்கள் இப்போது எழுப்பப்படவில்லை. ஆனால், ஹர ஹர மோடி என முழக்கங்கள் எழுப்பப்படுகிறது” என்று கியான் சந்த் பராக் கூறியுள்ளார்.

ஒரு நாளைக்கு 22 மணி நேரம் நாட்டுக்காக உழைக்கும் பிரதமர் மோடி – மகாராஷ்டிர பாஜக தலைவர் தகவல்

“சிவனின் மூன்றாவது கண் திறக்கும்போது ஒரு பேரழிவு வரும். மோடி மூன்றாவது கண்ணைத் திறந்தபோது, ​​​​காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர். பாகிஸ்தான் மண்ணில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்தது. நாட்டைப் பாதுகாப்பாகவும் நாட்டை வலிமையாகவும் மாற்றும் ஒரே தலைவர் மோடிதான்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கியான் சந்த் பராக்கின் கருத்துக்கு மாநில அமைச்சர் மகேஷ் ஜோஷி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“ஒரு மனிதனை எப்படி கடவுளுடன் ஒப்பிட முடியும். இது சிவபெருமானை அவமதிக்கும் செயல்” என்று அவர் கூறியுள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்