Aran Sei

ராஜஸ்தான்: பட்ஜெட்டை கறுப்பு நிற பெண்ணுடன் ஒப்பிட்ட பாஜக தலைவர் – வலுக்கும் எதிர்ப்பு

Credit : Twitter.com/Drsathishpooniya

ராஜஸ்தான் மாநில பட்ஜெட்டை கருப்பு நிற பெண்ணுடன் ஒப்பிட்டு அம்மாநில பாஜக தலைவர் சதிஷ் பூனியா தெரிவித்த கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைகுறித்து பேசிய ராஜஸ்தான் பாஜக தலைவர் சதிஷ் பூனியா, ”இது ஒரு பற்றாக்குறை பட்ஜெட். கருப்பு நிறம் கொண்ட ஒரு பெண்ணை, அழகு நிலையத்திற்கு அழைத்துச் சென்று அழகாக காட்டுவது போல பட்ஜெட் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிராக பாஜக தலைவர் தெரிவித்துள்ள கருத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கஜினி முகம்மதும் சோமநாதபுர படையெடுப்பும் – சூர்யா சேவியர்

இதுகுறித்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோஸ்தாரா, “பெண்களை அவமதித்தது மட்டுமின்றி, பெண்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் அநாகரீகமான மற்றும் பொறுப்பற்ற கருத்துக்களை சதீஷ் பூனியா தெரிவித்துள்ளார். பெண்கள், சகோதரிகள் மற்றும் மகள்களை தரக்குறைவான வார்த்தைகளில் பேசுவது பாஜக தலைவர்களின் அடையாளமாகிவிட்டது” என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் அசோக் கெஹ்லாட்டின் சிறப்புப் பணி அதிகாரியாக இருக்கும் லோகேஷ் ஷர்மா, “பெண்களுக்கான மரியாதை முக்கியமானது. பட்ஜெட்டை விமர்சிக்கும்போது பெண்களுக்கு எதிராக இனவெறியுடன் பேசியிருக்கும் கருத்து ஏற்புடையதல்ல. பெண்களை மதிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.” என ட்வீட் செய்துள்ளார்.

Source : The Indian Express

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்