Aran Sei

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து பள்ளிப்பாடம் – காவல்துறை வழக்குப்பதிவு

ராஜஸ்தானில் பன்னிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாக சித்தரித்து பாடம் அமைத்ததற்காக அம்மாநில பாடநூல் வெளியீட்டு துறை மற்றும் தனியார் பதிப்பு நிறுவனம் மீது ஜெய்ப்பூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கில் மூவரை ஜெய்ப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களை எதிரியாக்கி இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் பாஜக – : பத்ருத்தின் அஜ்மல்

காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் மொசின் ரஷீத் , இந்தச் சம்பவம்குறித்து புகாரளித்துள்ளார் என்றும் ,இதன்படி ஜெய்ப்பூர் காவல் துறை இந்திய தண்டனை சட்டம் பிரிவு 295எ மற்றும் பிரிவு 120பி’ கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் குற்றம், தீவிரவாதம் மற்றும் ஊழல் என்ற பாடத்தில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாக சித்தரித்து பாடங்கள் வெளியாகி இருக்கிறன என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்துவை திருமணம் செய்த இஸ்லாமியப் பெண்: இந்துவாக மதம் மாறாதவரை திருமணம் செல்லாது – நீதிமன்றம் தீர்ப்பு

மேலும் அந்தப் பாடத்தின் முடிவில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் இஸ்லாமியர் விரோதப்போக்கை தூண்டுவதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

இந்தப் பாடப்புத்தகத்தை தயாரித்த அனைவரின் மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் புத்தகம் 2013-2018 ஆம் ஆண்டு வசுந்தரா ராஜி ராஜஸ்தான் முதலமைச்சராக இருந்த பொது அறிமுகப்படுத்தப் பட்டது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயிலில் தண்ணீர் குடித்ததற்காக தாக்கப்பட்ட இஸ்லாமிய சிறுவர் – #sorryAsif ஹேஷ்டாக் மூலம் சிறுவனுக்கு துணைநிற்கும் மக்கள்

இதுகுறித்து தெரிவித்துள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரபீக் கான், “குறிப்பாக எந்த மதமும் தீவிரவாதத்தோடு சம்பந்தபட்டதில்லை , தேவை இல்லாமல் இஸ்லாமிய மதத்தை இந்தப் புத்தகத்தில் இழிவுபடுத்தி இருக்கிறார்கள் ” என்று கூறியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்