Aran Sei

‘புலம்பெயர் தொழிலாளர்களே, மகாராஷ்ட்ராவில் கொரோனா அதிகரிக்கக் காரணம்’ : ராஜ் தாக்கரே குற்றச்சாட்டு

வெளிமாநிலங்களில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள்தான், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் என்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று (ஏப்ரல் 6), செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  “இந்தியாவில் மகாராஷ்டிராதான் அதிக அளவில் தொழிற்வளர்ச்சி பெற்ற மாநிலம். அதன் காரணமாகவே, மகாராஷ்டிராவிற்கு வேலை தேடி வெளிமாநிலங்களில் இருந்து அதிகப்படியான தொழிலாளர்கள் வருகின்றனர். அவ்வகையில் வெளிமாநிலங்களில் இருந்து மகாராஷ்டிராவுக்கு வரும் தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த மாநிலங்களில் போதுமான அளவுக்கு கொரோனா தொற்று சோதனைகள் செய்யப்படுவதில்லை.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘கொரோனா ஊரடங்கின் போது, மகாராஷ்ட்ராவில் 17 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு’ – மத்திய அரசு

வெளிமாநிலங்களில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களே, மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கக் காரணம் என்றும் கடந்த ஆண்டு பொது முடக்கத்தின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கியதாகவும், ஆனால், பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்