ஜனவரி 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த இந்து மத சாமியார் காளிசரன் மகாராஜின் பிணை மனுவை ராய்ப்பூர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அண்மையில், சத்திஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடந்த தர்ம சன்சத் என்ற இரண்டு நாள் இந்து மதக்கூட்டத்தில் சாமியாரான அபிஜித் சரக் என்ற காளிச்சரண் மகாராஜ் கலந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சியின்போது பேசிய காளிசரண் மகாராஜ் மகாத்மா காந்திக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், அவரைக் கொலைச் செய்த நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
காந்தியை கொன்ற கோட்சேவுக்கு தலைவணங்குகிறேன் – இந்துத்துவ சாமியார் காளிச்சரண் சர்ச்சை பேச்சு
இதையடுத்து, அவர் மீது ராய்பூரில் காவல்நிலையத்தில் வழங்குப்பதிவு செய்யப்பட்டது.
டிசம்பர் 30ஆம் தேதி, மத்திய பிரதேசத்தின் கஜுராஹோவில் காளிசரண் மகாராஜ் ராய்ப்பூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து, அவர் 14 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், நேற்று(ஜனவரி 3), காளிசரன் மகாராஜின் வழக்கறிஞர் ராய்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் பிணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவை விசாரித்துள்ள நீதிபதி விக்ரம் பி சந்திரா, காளிசரன் மகாராஜின் மீதான குற்றச்சாட்டுகள் தேசத்துரோக குற்றச்சாட்டு உட்பட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதியப்படுவதற்கான இயல்புடையவை என்று கூறியுள்ளார்.
அத்தோடு, காளிசரன் மகாராஜின் பிணை மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.