உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கையாற்றில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்கள் மீண்டும் மிதக்கத் தொடங்கியுள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பொழியக்கூடிய பருவமழையின் காரணமாக ஆற்றின் கரையில் மண்ணரிப்பு ஏற்பட்டு புதைக்கப்பட்டுள்ள சடலங்கள் ஆற்றில் மிதக்கத்தொடங்கியுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
மேலும், கடந்த மூன்று வாரங்களில் ஆற்றில் மிதந்த கிட்டத்தட்ட 150 சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் என்.டி.டி.வி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள்: குற்றத்திற்கு துணை நின்றதா பாஜக? – விலகும் திரை பெருகும் ஒளி
அதுமட்டுமல்லாது, மாநில பேரிடர் மேலாண்மை குழுவும், காவல்துறையும் அந்தப்பகுதியில் மிதக்கும் சடலங்களை அப்புறப்படுத்தி வருவதாகவும், சில சமயம் அப்பகுதி மீனவர்களின் உதவியைப் பெற்று அப்புறப்படுத்தி வருவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகளவில் சடலங்கள் மிதக்கத் தொடங்கியுள்ளதால் அப்புறப்படுத்துவது சிரமமாக உள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளதாக என்.டி.டி.வி செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.