Aran Sei

இந்திய ரயில் நிலையங்கள் மேம்பாட்டு கழகத்தை மூடும் ரயில்வே வாரியம் – இரண்டு மாதங்களில் மூடப்படும் இரண்டாவது நிறுவனம்

யில்வே நிர்வாகத்தைச் சரி செய்யும் முயற்சியின் தொடர்ச்சியாக, இந்திய ரயில் நிலையங்கள் மேம்பாட்டு கழகத்தை (ஐஆர்எஸ்டிசி) மூட ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் அமைக்கப்பட்ட ரயில் நிலையங்களின் மறுவளர்ச்சிக்காக ஐஆர்எஸ்டிசி அமைக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி மாற்று எரிபொருளுக்கான ரயில்வே அமைப்பு மூடப்பட்ட நிலையில், இரண்டாவதாக இந்த அமைப்பு மூடப்படுகிறது.

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல், படகு கவிழ்ப்பு: ‘இலங்கையின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்’ – ராமதாஸ்

பல்வேறு அமைச்சகங்களின் கீழ் உள்ள பல அமைப்புகளை ஒன்றோடு ஒன்று இணைப்பது அல்லது மூடுவது என்ற நிதி அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஐஆர்எஸ்டிசியால் நிர்வகிக்கப்படும் ரயில் நிலையங்கள் அனைத்தும் அந்த மண்டல் ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும், வளர்ச்சிக்கான திட்டங்களை மாநகராட்சி அவர்களுக்கு அனுப்பும் என்றும் ரயில்வே வாரியம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஐஆர்எஸ்டிசி மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தின் மறுவளர்ச்சி திட்டத்திற்கான ஏல நடைமுறையில் ஈடுபட்டது.

சண்டிகர் மற்றும் கே.எஸ்.ஆர் பெங்களுரு ரயில் நிலையங்களில் “ரயில் ஆர்கேட்” அமைப்பதற்கான ஏலங்களுக்கு ஐஆர்எஸ்டிசி சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தது.

ஆஸ்திரேலியாவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவருக்கு இந்தியாவில் உற்சாக வரவேற்பு : யார் இவர் ?

தென்னிந்தியா முழுவதும் 90 ரயில் நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தை ஐஆர்எஸ்டிசி அறிவித்துள்ளது.

முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் தயாரித்த அறிக்கையில், ரயில்வே உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் பெருக்குதல் தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்தும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டை (ஆர்.வி.என்.எல்) இந்திய ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் (ஐஆர்சிஎன்) என்ற சிறப்பு உள்கட்டமைப்பு கட்டுமான அமைப்புடன் இணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்