Aran Sei

ரயில்வே தேர்வுகளில் முறைகேடு: வேலைவாய்ப்பின்மையைக் கண்டித்து போராட்டம் – முடங்கியது பீகார்

யில்வே ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் உள்ள முரண்பாடுகளைக் கண்டித்து இடதுசாரி அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த பீகார் பந்த் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் முடிந்துள்ளது.

ஆளுநர் மாளிகையை நோக்கிப் பேரணி சென்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், ஜன் அதிகார் கட்சி, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் போராட்டத்தின் காரணமாக இயங்கவில்லை. சாலை மறியல், ரயில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

தர்பங்காவில் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸை போராட்டக்காரர்கள் நிறுத்தியுள்ளனர். வடக்கு பீகாரை பாட்னாவுடன் இணைக்கும் காந்தி சேதுவில் காலை முதல் போக்குவரத்து தடைபட்டது.

“இந்தப் பிரச்சினை பீகார் மக்களின் எதிர்காலத்தைப் பற்றியது என்பதால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்” என்று ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சக்தி சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்