ரயில்வே துறை தனியாருக்கு தாரைவார்க்கப்படாது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்
மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் ரயில்வே துறை தனியாருக்கு தாரைவார்க்கப்படாது எனவும் , ரயில்வே துறை சிறப்பாக செயல்பட தனியார் முதலீடுகள் ஊக்குவிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
‘தனியார் ரயில்களுக்கு 30,000 கோடி முதலீடு வேண்டும்.’ – ரயில்வே துறை அறிக்கை
நாடாளுமன்றத்தில் ரயில்வே துறைமீதான நிதிநிலை குறித்து பேசிய பியூஸ் கோயல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த மார்ச் 2019 க்கு பிறகு ரயில்வே விபத்துகளில் ஒரு பயணிகள் கூட உயிரிழக்கவில்லை என்றும், ரயில்வே துறை பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.
ரயில்வே துறைக்கு கடந்த நிதியாண்டில் 1.5 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் , நடப்பு நிதியாண்டில் 2.15 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பியூஸ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.
SOURCE:PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.