Aran Sei

கொரோனா சிகிச்சைக்குத் தயாராகும் ரயில் பெட்டிகள்: தயார் நிலையில் 2900 படுக்கைகள் – அறிவித்த ரயில்வே நிர்வாகம்

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் வகையில் நாடுமுழுதும் ரயில் பெட்டிகளில் 2900 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், அதில் 103 பேர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 64 பெட்டிகளைப் பயன்படுத்தி வருவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், கடந்த 10 நாட்களில், 191 ரயில்பெட்டிகளை கொரோனா சிகிச்சைக்காக மாற்றியுள்ளதாகவும், மாநில அரசுகளின் தேவைக்கு ஏற்ப 4000 ரயில் பெட்டிகளில் 64,000 படுக்கைகள் தயார்ப்படுத்த உள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

ரயில்வே பணியாளர்கள் 93,000 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு – சிக்கலின்றி ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் நடவடிக்கை

இந்நிலையில், குறைவான மருத்துவ வசதிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் வசதி ஆகியவற்றின் காரணமாக மிகக்குறைந்த அளவிலான மக்களே இந்தச் சேவையைப் பயப்படுவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ரயில் பெட்டி மருத்துவமனைகள்குறித்து தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், “தனிமைப்படுத்துதல் வார்டுகளாக மட்டுமே இவை செயல்படும். ஒரு வேளை கொரோனா பாதிக்கப்பட்டு இங்குத் தங்கவைக்கப்பட்டுள்ளவருக்கு சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவார்” என்று தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டினைத் தவிர்க்க ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ – ரயில்வே துறை முடிவு

மேலும், டெல்லி, மகாராஷ்டிரா (அஜ்னி ஐசிடி, நந்தூர்பார்) மற்றும் மத்தியப் பிரதேசம் (இந்தூருக்கு அருகில் உள்ள திஹி) ஆகிய இடங்களில் ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்துதல் வார்டு அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்