Aran Sei

ரயில்வே பணியாளர்கள் 93,000 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு – சிக்கலின்றி ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் நடவடிக்கை

டந்த சில வாரங்களில் 93,000 ரயில்வே பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ரயில்வே அமைச்சகம், பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படாத வகையில் செயல்படுவது குறித்து சிந்தித்து வருவதாகவும் குறிப்பாகப் புலப்பெயர் தொழிலாளர்கள் இடம்பெயரும் போதும் , ஆக்சிஜன் கொண்டு செல்லப்படும்போதும் சிக்கல் ஏற்படாத வகையில் ஆராய்ந்து வருவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் தேவைக்கு நாங்கள் யாரிடம் பேச வேண்டும் – பிரதமரிடம் கேள்வி எழுப்பிய அரவிந்த் கெஜ்ரிவால்

இதுகுறித்து தெரிவித்துள்ள ரயில்வே வாரியத்தின் தலைமை அதிகாரி சுனீத் சர்மா, “ஏறக்குறைய 93,000 பணியாளர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் அனைவருமே மருத்துவ மனையில் அனுமதிக்கப்படவேண்டிய தேவையில்லை , அதுமட்டுமின்றி  ரயில்வேயில் பணிபுரியும் முன்களப்பணியாளர்களான டிரைவர்கள், கார்டுகள் போன்றவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், மேலும் ரயில்வேயில் 5000 படுக்கை வசதிகொண்ட 72 மருத்துவ மனைகள் உள்ளன ” என்று தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க ரயில் சேவைகள் நிறுத்தப்படுமா? – ரயில்வே வாரியம் விளக்கம்

மேலும், ரயில்வே பணியாளர்கள் பாதிக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ள அத்துறையின் மூத்த அதிகாரி , ரயில்வே மருத்துவமனையில் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின்  எண்ணிக்கை மட்டுமே தற்போது உள்ளது, உண்மையில் மேலும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்
. இந்நிலையில் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின்  காரணமாக  ரயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்